Dialog Box

What is palliative care? - Tamil

What is palliative care? - Tamil

வேதனை தணிப்புப் பராமரிப்பு என்றால் என்ன?


வேதனை தணிப்புப் பராமரிப்பு (Palliative care) என்பது குணப்படுத்த முடியாத நோயுடன் வாழ்வோருக்கான உடல்நலப் பராமரிப்பாகும். இது நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்துக்கும் சௌகரியம், ஆதரவு மற்றும் வாழ்க்கைத் தரத்தில் கவனம் செலுத்துகிறது. இது மக்கள் தங்களால் முடிந்தவரை நீண்டகாலத்துக்கு வாழ உதவுகிறது.

  

வேதனை தணிப்புப் பராமரிப்பை எப்போது துவங்கலாம்? 

இறுதி வாரங்கள் அல்லது நாட்களில் மட்டுமின்றி, படிப்படியாக நோய் தீவிரமடையும் எந்த நேரத்திலும் வேதனை தணிப்புப் பராமரிப்பைத் தொடங்கலாம். பல சமயங்களில் ஒருவர் தனது நோய்க்காக பிற சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்டிருக்கும்போதே, வேதனை தணிப்புப் பராமரிப்பைப் பெறமுடியும்.

வேதனை தணிப்புப் பராமரிப்பை யார் வழங்குகிறார்கள்?

வேதனை தணிப்புப் பராமரிப்பை பொது மருத்துவர், மருத்துவ வல்லுநர் அல்லது செவிலியர் போன்ற எந்தவொரு சுகாதார நிபுணரும் வழங்கலாம்.

ஒருவரது அறிகுறிகள் மேலும் சிக்கலானதாக ஆகும்போது தணிப்புப் பராமரிப்பின் நிபுணத்துவச் சேவைகள் தேவையிருக்கலாம்.  அவை வழக்கமாக கடுமையான வலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற வாழ்வின் இறுதி நிலை அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு மருத்துவர் அல்லது செவிலியரின் மேற்பார்வையில் நடைபெறும்.

ஒருவருக்கு ஏற்கெனவே உள்ள மருத்துவர் குழுவுடன் இணைந்து வேதனை தணிப்பு மருத்துவ நிபுணர் குழு தொடர்ந்து பணியாற்றும். அந்தக் குழுவில் இருக்கக்கூடியவர்கள்:

  • மருத்துவர்கள்
  • செவிலியர்கள்
  • துணை மருத்துவ வல்லுநர்கள் 
  • மருந்தாளர்கள்
  • உளவியலாளர்கள் 
  • ஆன்மீக அல்லது ஆயர் பராமரிப்புப் பணியாளர்கள் 
  • வேதனை தணிப்புப் பராமரிப்பு தன்னார்வலர்கள்

வேதனை தணிப்புப் பராமரிப்பு சிறப்பு நிபுணர் சேவைகளைப் பெறுவது எப்படி?

வேதனை தணிப்புப் பராமரிப்பு சிறப்பு நிபுணர் சேவைகளுக்கான பரிந்துரையை ஒரு தனிநபர் அல்லது குடும்ப உறுப்பினர் அல்லது பராமரிப்பாளர் அல்லது எந்தவொரு மருத்துவரும் செய்யலாம்.

வேதனை தணிப்புப் பராமரிப்பு சிறப்பு நிபுணர் சேவைகளில் எத்தகைய பராமரிப்பு வழங்கப்படுகிறது?

வேதனை தணிப்புப் பராமரிப்பு சிறப்பு நிபுணர் சேவைகளில் அடங்குபவை: 

  • சிக்கலான உடல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவுதல்
  • சமூக, கலாச்சார, ஆன்மீகக் குறைகளில் ஆதரவு 
  • அந்த நபர் மற்றும் அவரது குடும்பம் அல்லது பராமரிப்பாளர்களுக்கு ஆலோசனை மற்றும் துயரத்தில் ஆதரவு

வேதனை தணிப்புப் பராமரிப்பு சிறப்பு நிபுணர் சேவைகள் எங்கு வழங்கப்படுகின்றன?   

வேதனை தணிப்புப் பராமரிப்பு வழங்கக்கூடிய இடங்கள்:

  • வீட்டில்
  • மருத்துவமனையில்
  • ஒரு இறுதிக்காலப் பராமரிப்பகங்களில் 
  • ஒரு முதியோர் பராமரிப்பு இல்லத்தில்
  • ஆதரவுடன் மாற்றுத்திறனாளி தங்கியிருக்குமிடத்தில்

வேதனை தணிப்புப் பராமரிப்பு சிறப்பு நிபுணர் சேவைகளுக்கு எவ்வளவு செலவாகும்?  

பெரும்பாலான வேதனை தணிப்புப் பராமரிப்புச் சேவைகள் இலவசமானவை. மருந்துகள் அல்லது உபகரணத்துக்கு சிறிது செலவு இருக்கும். தேவைப்பட்டால், அவை விவாதிக்கப்படும். 

குடும்பம் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு என்ன ஆதரவு உள்ளது?   

குடும்பங்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு வேதனை தணிப்புப் பராமரிப்பு சிறப்பு நிபுணர் சேவைகள் நடைமுறை மற்றும் உணர்வுரீதியான ஆதரவையும் அளிக்கின்றன.

ஒரு மொழிபெயர்த்துரைப்பாளர் தேவைப்பட்டால் என்ன செய்வது?

வருகைக்கு ஒரு மொழிபெயர்த்துரைப்பாளர் தேவைப்பட்டால் அதைச் சேவையிடம் தெரியப்படுத்துவது முக்கியம்.

நான் ஒரு சேவையைக் கண்டறிவது அல்லது கூடுதல் தகவல்களைப் பெறுவது எப்படி?  

  • உங்கள் மருத்துவர், சிறப்பு நிபுணர் அல்லது ஏதேனும் சுகாதார வல்லுநரிடம் பேசுங்கள்
  • உங்கள் உள்ளூர் வேதனை தணிப்புப் பராமரிப்புச் சேவையை அழையுங்கள்
  • வேதனை தணிப்புப் பராமரிப்பு விக்டோரியாவைத் தொடர்புகொள்ளுங்கள்   
    • தொலைபேசி 03 9962 9644 (காலை 9 முதல் மாலை 5 மணிவரை, திங்கள் முதல் வெள்ளிவரை) 
    • மின்னஞ்சல்: info@pallcarevic.asn.au

ஒரு தொலைபேசி மொழிபெயர்த்துரைப்பாளரை ஏற்பாடு செய்ய முடியும். தயவுசெய்து உங்களுக்கு எந்த மொழி தேவை என்று கூறுங்கள்.


Further Resources


What is palliative care? - Tamil
DOWNLOAD FLYERORDER HARD COPIES (FREE)




Donate